Mrs. Radhika Harish
நான் திருமதி ராதிகா ஹரீஷ். கணினித் துறையில் பொறியியல் பட்டதாரி. திருச்சியை சேர்ந்தவர்.
சிறுவயதிலிருந்தே தமிழின் மீது அதீத ஆர்வம் உண்டு. மஸ்கட் தமிழ்ச் சங்கத்தில் தன்னார்வல தமிழ் ஆசிரியையாக ஆறு வருடங்கள் பணியாற்றினேன். பட்டிமன்றங்கள், கவியரங்குகள் மற்றும் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளேன்.
தற்போது மலேசியாவில் குளோபல் தமிழ் பள்ளியின் இணை நிறுவனராக இங்கிருக்கும் மாணவர்களுக்கும் அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தியா என பல்வேறு நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இணைய வழியில் தமிழ் பயிற்றுவித்துக்கொண்டிருக்கின்றேன்.
தரணியெங்கும் தமிழ்த்தலைமுறை என்ற உன்னத நோக்கோடு செயல்பட்டு British Tamil Exam Board ன் உறுப்பினராகவும் உள்ளேன்.
கேபிஆர் கல்வி நிறுவனத்தின் ஞான செவ்வேல் விருது, மருதாணி மாத இதழின் அப்துல்கலாம் விருது என்பன பெற்றவைகளில் சில.
+601135393014
Ms. Shobana Shangar
நான் சோபனா சங்கர் தாய்நாடு இலங்கை எனது கலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முடித்த பின்னர், பகுதிநேர ஆங்கில ஆசிரியராக பணியாற்றினேன். பின்னர், இங்கிலாந்தில் Canterbury University இல் ஆசிரியர் பயிற்சி நெறியினை முடித்து தற்போது லண்டனிலுள்ள கல்லூரியில் உதவி ஆசிரியராகவும், தமிழ்ப் பாடசாலையில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.
07578 425924
Mrs. Rajane Uthayasegaran
நான் திருமதி ரஜனி உதயசேகரன். தாய்நாடு இலங்கை. 30வருட ஆசிரிய சேவை. இப்போது இங்கிலாந்தில் கொவன்றி நகரிலேயே வசிக்கிறேன். அங்கே கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கற்பிற்கிறேன்.
கல்வியிலும் கலைமாமணி பட்டம் பெற்றுஉள்ளேன். அத்தோடு எனது ஆசிரிய சேவையைப் பாராட்டி 2020 இல் "ஆசான்வள்ளுவர் விருது பெற்றது பெருமைக்குரியது.
+44 7449 740 00
Fayiza Aboosali
நான் பைஷாஅபுசாலி. கலைமானி பட்டதாரி ஆசிரியர். தாய்நாடு இலங்கை. தற்போது இங்கிலாந்தில் கொவன்றியிலே வசிக்கிறேன். கொவன்றி தமிழர் நலன்புரிச்சங்கம் நடாத்தும் தமிழ் பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றேன். சாதாரண தர(O/L) மாணவர்களுக்கு தமிழ் படிப்பிக்கின்றேன்.
07715413140
ஜெயஸ்ரீ சதானந்தன்
நான் ஜெயஸ்ரீ சதானந்தன். இளம்கலைமானி நடைமுறைத் தமிழ் முடித்துள்ளேன். இரண்டாம் வருடம் முதுகலைமானி தமிழ் பட்டப்படிப்பை கோயம்புத்தூரில் இருக்கும் பாரதியார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து படித்துக் கொண்டிருக்கின்றேன். பிரித்தானியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக கொவன்றி தமிழர் நலன்புரிச்சங்கம் என்ற ஒரு தமிழ் பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றேன். சாதாரண தரம் தமிழ் படிப்பித்துள்ளேன். இப்போது உயர்தரம் தமிழ் வகுப்பு படிப்பிக்கின்றேன்.
+44 7450 227 890
கலையரசி துறைவன் BA
இலங்கையில் இருந்த காலப்பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். தற்போது BTEB - British Tamil Examination Board இல் உறுப்பினராக இருப்பதோடு பிரித்தானியாவில் கொவன்றி தமிழர் நலன்புரிச்சங்க தமிழ் பாடசாலையில் 13 வருடமாக ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன்.
அத்தோடு MA இரண்டாம் வருடம் (முதுகலைமானி) கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இணைந்து படித்துக் கொண்டிருக்கின்றேன்.
+44 7821 509 445
ராஜி திருச்செல்வம். BA
இலங்கையில் இருந்த காலப்பகுதியில் ஆசிரியராகப் பத்து வருடங்கள் பணியாற்றினேன். தற்போது, பிரித்தானியாவில், லண்டனில் வசிக்கிறேன். இங்குள்ள இரண்டு பாடசாலைகளில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றேன்.
அத்தோடு MA இரண்டாம் வருடம் (முதுகலைமானி) கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இணைந்து படித்துக் கொண்டிருக்கின்றேன்.
திருமதி. சசிரேகா மலரவன்
நான் எனது இளங்கலைமாணிப் B.A(Hons) பட்டத்தைப் பட்டத்தை(பொருளியல்), யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், முதுகலைமாணிப் பட்டத்தினை (MDE) மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்(இலங்கை) பூர்த்தி செய்துள்ளேன்.
தமிழ்மொழி ஆசிரியர் (More than 10 years) மற்றும் தமிழ்மொழிப்பரீட்சகராக பிருத்தானிய தமிழ்மொழி பரீட்சை சபையில் (BTEB) கடந்த 5 வருடங்களுக்கு மேலாக எனது சேவையினை வழங்கிவருகின்றேன்.
பிரித்தானிய கவின்கலை நிறுவனமாகிய OFAAL நிறுவனத்தில் வாய்ப்பாட்டு (Vocal - Carnatic Music) ஆசிரியராகவும், பரீட்சகராகவும் கடந்த 8 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறேன்.
Director of Tamil Language & Cultural Studies - Rugby, United Kingdom.
07780957583
உமா அசோக்
நான் ஆசிரியை உமா அசோக் M.Sc.,M.Ed., முதுகலை பட்டதாரி ஆசிரியை. இந்தியாவில் சிலவருடங்கள் ஆசிரியையாக பணி புரிந்தேன். இப்பொழுது லண்டனில் தமிழ்ப் பள்ளியை (GLOBAL TAMIL SCHOOL) நிறுவி ஆசிரியராக இருந்து உலகளவில் (UK USA, Middle East, Finland,Singapore and Malaysia) 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இணைய வழியில் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது British Tamil Exam Board ல் உறுப்பினராகவும் இருக்கின்றேன்.
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"
+44 7459 713276
கமலாவதி ஜெயபாலன் BA
முன்நாள் ஆசிரியர், தலைமை ஆசிரியை (சட்டன் தழிழ்ப் பாடசாலை)
+44 7807 607 879
திருமதி. தயாநிதி இரவீந்திரன்
கடந்த பதினாறு வருடங்களாக கனேடிய அரசாங்கப் பாடசாலைகளில் தொடர் கற்கை நெறியான சர்வதேச மொழிகளில் ஒன்றான செம்மொழியான தமிழைக் கற்பிக்கின்றேன். கனடாத் தமிழ்க் கலைத் தொழில்நுட்பக் கல்லூரியின் மறைமலை அடிகளார் வளாகத்திற்குப் பொறுப்பாளராகவும் தமிழ், அபாக்கஸ் கணிதம் கற்பிற்கும் ஆசிரியையாகவும் மூன்று ஆண்டுகள் கடமையாற்றினேன். ஈழத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் பிரதி ஆசிரியையாகவும், திருகோணமலை, ஸ்ரீ சண்முகா மகளிர் இல்லத்திலும், இந்தியாவில் வளசரவாக்க பாடசாலையிலும் தொண்டர் ஆசிரியையாகவும் கடமையாற்றினேன்.
தற்பொழுது இங்கிலாந்து, வளர் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மையம் ஊடாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இளநிலை நடைமுறைத்தமிழ் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டை நிறைவு செய்கின்றேன். அத்துடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பில் மொழியியல், எழுத்திலக்கணம், தற்கால இலக்கியம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி அடைந்துள்ளேன். மற்றும் சொற்பிறப்பியல் இலக்கணம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நெறிமுறை இலக்கியம், தமிழ்க் காவியங்கள், சங்க இலக்கியம், தமிழீழ வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றையும் கற்றுள்ளேன். நாவல பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் விஞ்ஞான தொழில்நுட்ப இளமாணிக்குரிய கற்கையையும், கணினிக் கற்கை நெறிக்கான சான்றிதழையும் பெற்றுள்ளேன். மற்றும் இருதயவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறி முடித்து டிப்ளோமா எடுத்துள்ளேன்.
"கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்"
+9057823111
Mrs Ranjana Ra
+44 7922 202 236