Curriculum

  • உடை
    • மக்கள் அணியும் உடைகள் :- காலத்திற்கு ஏற்ப ஆடைகள். கோடை, மாரிகால ஆடைகள்.
      பருவ காலங்கள் பற்றிய அறிவை ஏற்படுத்தல்.
      நாட்டுக்கு நாடு வேறுபடும் ஆடைகள் பற்றிக் கலந்துரையாடல்.
      விரும்பிய நிறங்கள் பற்றி அறிதல். பல வகையான ஆடைகள் பற்றி அறிதல். சேலை, காற்சட்டை, வேட்டி.
      பலவகையான படங்களைப் பயன்படுத்துதல்.
      சொல்லட்டைகளைப் பயன்படுத்துதல்.
      இலக்கணச்சொற்களை உள்வாங்குதல்
      உ+ம்:- ஒருமை, பன்மை, ஆண்பால், பெண்பால்.
      உடைகளின் அளவுகள் பற்றி அறிதல்.
      மாதங்கள், பருவகாலங்கள் போன்றவற்றை அறிதல், அவை பற்றி விரிவாக அறிதல், எழுதவும் பழகுதல்.

  • பாடசாலை
    • வகுப்பறை, நேர அட்டவணை, பாடங்களின் பெயர்கள், விரும்பிய, விரும்பாத பாடம் பற்றிக் கதைத்தல்.
      பாடத்தின் நேரங்கள், பாட ஆசிரியர்கள் பற்றிப் பேசுதல், எழுதுதல்.
      உ+ம்:- மாணவர்கள் படிக்கும் பாடங்கள்.
      நீங்கள் இப்பொழுது என்ன பாடம் படிக்கிறீர்கள்?
      உங்களுக்கு விருப்பமான பாடம் என்ன?
      உங்களது பாடசாலையின் பெயர் என்ன?
      பாடசாலை தொடங்கும் நேரம், முடியும் நேரம் என்ன?
      மெய்யெழுத்துக்கள், உயிர் எழுத்துக்கள் பற்றி அறிதல்.
      மெய் எழுத்து, உயிர் எழுத்து சேரும் போது ஏற்படும் எழுத்துரு மாற்றம், ஒலிமாற்றம் பற்றி அறிதல்.

  • பேசுதல்: உணர்வுகள்
    • சந்தோசம். கவலை, அழுகை பற்றி அறிதல். அது எப்போது வரும் என்று பேசுதல். மன்னித்தல், பிரச்சனைகளை வெளிக்காட்டல், உதவி கேட்டல், பரிமாறுதல், சந்தோசப்படுதல், வெற்றியைக் கொண்டாடுதல். மற்றவர் கஷடத்திலும் கவலையிலும் பங்கெடுத்தல். வகுப்புக்குப் பிந்திச் சென்றால் மன்னிப்பு கோருதல்.

      எனக்கு விளங்கியது, விளங்கவில்லை, இந்தப் பேனாவை தரமுடியுமா? இது போன்ற வினாக்களைக் கேட்டு மாணவர்கள் மனதில் நல்ல வசனங்களைப் பதிய வைத்தல் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொணருதல்.

  • கொண்டாட்டங்கள்
    • கொண்டாட்டங்கள் ஏன் கொண்டாடப்படுகிறது? எப்படிக் கொண்டாடப்படுகிறது? எந்தக் கொண்டாட்டங்களை எந்த மக்கள் கொண்டாடுகிறார்கள்? அதன் பயன் பற்றிப் பேசுதல், கேள்வி கேட்டல், எழுதுதல்.
      உ+ம்:- தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, நீராடுதல், பரிமாறுதல், மருத்துநீர். பலகாரம், கைவிசேடம். போன்றவை பற்றிக் கதைத்தல் புதுவருட வாழ்த்துக் கூறுதல், வாழ்த்து மடல் தயாரித்தல், உணவு பரிமாற்றங்கள் கொண்டாட்டங்கள் தொடர்பான கதைகளை கூறுதல்.

      தேசிய விளையாட்டு:- கிளித்தட்டு தற்கால விளையாட்டுகள் பற்றியும் கலந்துரையாடுதல்.
      ஆலய வழிபாடுகள், கோயிலுக்குச் செல்லுதல், சுத்தம், சமயங்களைப் பற்றி அறிதல்.
      உ+ம்:- கோயிலுக்குச் செல்லும் போது எவ்வாறான பொருட்களை கொண்டு செல்லுதல். இவ்வாறு ஏனைய சமயம் பற்றியும் அறிதல்.

  • ஊர் பற்றி
    • வசிக்கும் ஊர், சொந்தக் கிராமம், தாய்நாடு, கிராமம், நகரம் பற்றிக் கலந்துரையாடுதல் கதைகள் கூறுதல், பிள்ளைகளிடமிருந்து கதை கேட்டல். (நீதிக் கதைகள்)


Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 1
Past papers: Set 2


Resources

Recommended books