Curriculum

  • மக்களைச் சந்தித்தல்
    • குண இயல்புகளை அறிதல். உறவு முறைகளை அறிதல்.
      வணக்கம் சொல்லுதல், நல்லவர்கள், கெட்டவர்கள், நன்மை, தீமை போன்ற குண இயல்புகள் பற்றிக் கலந்துரையாடுதல்.
      உ+ம்:- புத்திசாலி, முட்டாள் போன்ற அபிப்பிராயங்களை கூறுதல்.
      உயிர், மெய் எழுத்துக்கள் என்பவற்றை விரிவாகக் கற்றல்.

  • பிரபல்யமானவர்கள்
    • பிரபல்யமானவர்கள் பற்றி அறிதல், எழுதல். அவர்களின் தொழில் வாழ்க்கை பற்றி அறிதல்.
      உ+ம்:- நடிகர், ஓவியர், விளையாட்டு வீரர்கள்.

      தமிழ்ப் பெரியார்கள் பற்றி அறிதல்.
      உ+ம்:- ஆறுமுகநாவலர், சுப்பிரமணிய பாரதியார்.

      அவர்களின் தொழில், அவர்கள் பிறந்த திகதி, இடம், செய்த தொழில் ஆகியவை பற்றி அறிதல் எழுதுதல். அவர்களின் சாதனைகள், உடல் தோற்றம், குணம், அவர்கள் உடை பற்றி அறிதல்.
      எதிர்கால வளர்ச்சிகள், மாணவர்களின் சொந்தக் கருத்துகள், தானும் மற்றவர்கள் போல் உயர்வான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுதல்.
      ஆதாரங்களை வைத்து அவர்கள் பற்றி சிறு கட்டுரைகள் எழுதுதல். (சொற்கள் 50 -75)

  • ஊடகம்
    • பலதரப்பட்ட ஊடகம் பற்றிக் கலந்துரையாடுதல்.
      உ+ம்:- தொலைக்காட்சி, வானெலி, தொலைபேசி, இறுவட்டு, கணனி. அவற்றின் ஆங்கிலச் சொல்லையும் தெரியப்படுத்தல்.

      தொழில்கள் பற்றியும் அவற்றில் உள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் கலந்துரையாடுதல்.
      தொலைகாட்சியில் விரும்பிய நிகழ்ச்சி, ஏன் விரும்புகிறாய்? தொலைபேசி எங்கு, ஏன் உபயோகிக்கப்படுகிறது? உனக்கு பிடித்த பாடகர்? உன்னிடம் உள்ள கணனியின் வகை?
      மாணவர்களை செய்தி வாசிப்பவர்கள் போன்று தயார்ப்படுத்தி அவர்கள் முயற்சியை வெளியில் தெரியப்படுத்தி ஊக்குவித்தல்.
  • கட்டிடக்கலை
    • கட்டிடக்கலை பற்றித் தெரிதல் வீடு, மற்ற கட்டிடங்கள் அமைப்பினை ஒப்பிடுதல்.
      உ+ம்:- தற்போது வீடுகள் எவ்வாறு தோற்றம் அளிக்கின்றன. வீடுகள் எங்கே? எவற்றால் கட்டப்பட்டிருந்தன? புதிய, பழமை வாய்ந்த, பாரம்பரிய, நவீன வீடுகளைப் பற்றிக் கலந்துரையாடல்.

  • காலநிலை
    • இடம் வேறபட்டால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிக் கலந்துரையாடுதல். குளிரான காலநிலை, வசதிகள் பற்றி கலந்துரையாடல். ஏழை, பணக்காரர் வசதிக்கேற்ப தளபாட அமைப்பு. வீட்டுப் பொறுப்புக்களும் பங்களிப்புகளும் அவற்றைப் பிரித்துக் கொடுத்தலும் இலகுவாகச் செய்தலும்.

  • உடைகள்
    • நாகரீக உடைகள், இடத்திற்கேற்ப நாகரீக உடை அணிதல். ஆபரணங்கள், பாடசாலைச் சீருடை களியாட்டங்கள், கலாசார விழா பற்றி விபரித்தல்.
      செயல் முறையை ஒப்பிடுதல், திசைகள் பற்றி அறிதல். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு புதிய ஆண் பெண்களுக்கான உடைகள்.
      உ+ம்:- நீங்கள் என்ன அணிவீர்கள்? அவள் என்ன அணிவாள்? சட்டை அரைக்காற்சட்டை, கழுத்துப்பட்டி, தோள்த்துண்டு, கையுறை, இடுப்புப்பட்டி, தொப்பி, வேட்டி, போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடல்.
      திருமண வைபவங்களில் அணியும் ஆடைகள் பற்றிக் கலந்துரையாடல்

  • ஊடகங்களைப் பற்றி விரிவாக அறிதல்
    • தொழில் நுட்ப முன்னேற்றம்
      உ+ம்:- நீங்கள் வானொலி கேட்பீர்களா? தோலைகாட்சியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை கூறுங்கள்? ஏன்?

      சினிமா அல்லது சங்கீதக் கச்சேரி, கலாச்சார நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்தல். நோய்கள், சிகிச்சைகள், வைத்தியசாலைகள், காயங்கள், அவசரசிகிச்சைகள் பற்றி அறிதல்.
      உ+ம்:- அவருக்கு என்ன நடந்தது? என்ன செய்ய வேண்டும்? நான் ஆரோக்கியமாக இருக்கின்றேனா? அவன் கையில் நெருப்புச் சுட்டுவிட்டது. மருத்துவரிடம், பல் மருத்துவரிடம், கால் நடை மருத்துவரிடம், மருந்து விற்பனையாளரிடம் கலந்துரையாடல்.

  • உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு
    • சுற்றாடல்கள், நண்பர்களுடன், உறவினர்களுன் சந்தோசமாகக் கூடிக் கதைத்தல்.
      உ+ம்:- நான் தாவர உணவு உண்பவன். நான் சந்தோசமாக பொழுதைக் களித்தேன்.
      உடற்பயிற்சியால் என்ன நடக்கும், ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? உணவுக் கட்டுப்பாட்டால் என்ன நன்மை? எப்படிக் கட்டுப்படுத்தலாம்? என்ன உணவு உண்ண வேண்டும்? என்பது பற்றி அறிதல்.
      இலங்கை, இந்திய உணவு வகைகள், அதன் முறைகள், ஐரோப்பிய உணவு முறைகள். பிரபல உணவு வகைகளை அறிதல், தயாரிக்கும் முறைகள் பற்றி அறிதல்.
      ஆரோக்கியமான உணவு முறைகள். தேசிய உணவு வகைகள். பாரம்பரிய உணவுகள், இனிப்புப் பண்டங்கள்

  • பாடசாலை
    • பாடசாலைக் கல்வி முறைகளும், பழக்க வழக்கங்களும் நம் நாட்டுக் கல்வி முறைகள் இங்கிலாந்து நாட்டுக் கல்வி முறைகள், பாடத்திட்டங்கள் சீருடைகள், மாணவர்களுடைய பண்பாடு, தவறுகளைத் தண்டிக்கும் முறை பாடசாலையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், மாணவர் மன்றம், இந்து மன்றம், கழகங்கள் போன்றன பற்றி உரையாடல், எழுதுதல் உள்ளக அமைப்புகளும் செயற்பாடுகளும்,
      வாராந்த இறை வழிபாடுகள். தின வழிபாடு. சுற்றுலா பயணங்கள் பள்ளிக்கூடங்களும், அவற்றின் பலன்களும், பிரதி பலன்களும் பற்றி அறிதல் எழுதுதல்.
      (1 தொடக்கம் 300 சொற்கள் வரை எழுதல் வேண்டும்)

  • ஓய்வு நேரத்தில் எமது செயற்பாடுகள்
    • உறவினர்களுடன் கூடிக் கழித்தல், அடிக்கடி அல்லது எப்போதாவது சந்திக்கும் நண்பர்களுடனான மெழுகுகள் எப்படி?
      செய்யும் ஓய்வு நேர வேலைகள். விருப்பமற்று செய்யும் வேலைகள்.
      விளையாட்டுகள் ஒன்று கூடல்கள் பயன்னுள்ள பொழுது போக்குகள், வித்தியாசமான பொழுது போக்குகள் பொழுது போக்குகள் பற்றிய கருத்து வெளிப்பாடுகள்.
      ஊடகங்கள், சினிமா, பத்திரிகை, வானொலி, இணையத்தளம் பற்றி அறிதல். எழுதல் தரமான ஊடகங்கள், அவற்றின் பயன்களும், அவசியங்களும் பொழுது போக்குச் சாதனங்கள் நிகழ்ச்சிகள், திரைப்படப்பாடல்கள் எமக்குப் பிடித்த பிடிக்காத பாடல்கள் பற்றி உரையாடல், எழுதுதல்.
      திரைப்படப் பாடல்கள், திரைப்படத்தில் ,ருந்து ஒரு பகுதிகள் பற்றி விமரிசனக் கட்டுரைகள் எழுதல். இவை பற்றிக் கருத்துப் பரிமாறல்.
      இலக்கணம்:- வினை அடை மொழிகள் பதங்கள் சொற்களைச் சேர்த்துப் பிரித்து எழுதுதல்.


Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 1
Past papers: Set 2


Resources

Recommended books