Curriculum

Speaking / கதைத்தல்

  • நலமறிதல்:-
    • ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறுதல், அறிமுகம் செய்தல்.
      உ+ம்:- அம்மா எப்படி இருக்கிறீர்கள்.

      நண்பர்கள் உறவினர்கள் நலம் விசாரித்தல், பெயர் விசாரித்தல்.
      உ+ம்:- எனது பெயர் பாலா, எனது வயது பன்னிரெண்டு, எனது தங்கை வயது பத்து, உனது வயது என்ன? பெயர் என்ன?

      குடும்பம் பற்றி அறிதல்.
      உ+ம்:- குடும்ப அங்கத்தவர்களைப் பற்றி அறிதல், உறவுமுறைகளைப் பற்றி அறிதல்
      உ+ம்:- இவர் யார்? இவர் என் அண்ணா. (இவ்வாறு முக்கிய உறவு முறைகளைக் கதைத்து அறிதல்)

  • ஒரு விடயம் பற்றிக் கதைத்தல்
    • உ+ம்:- பறவைகள், மிருகங்கள், உயர்ந்த மனிதர்கள் பற்றிக் கதைத்தல், பிள்ளைகளைக் கூறவிடுதல்.

      உடல் உறுப்புகளை அறிதல், அதன் தொழிற்பாடு பற்றிக் கதைத்தல், கேட்டல்
      கண்:- கண்களால்ப் பார்த்தல்.
      காது:- காதால் கேட்டல்.
      கால்:- காலால் என்ன செய்கின்றோம்.
      என ஒவ்வொரு உடல் உறுப்பு பற்றிக் கேட்டல், கதைத்தல்.

  • கதை கூறுதல்: சிந்தனைக்கு உரிய கதைகளைக் கூறுதல்.
    • அதிலிருந்து சில கேள்விகளைப் பிள்ளைகளிடம் கேட்டுப் பதிலைப் எதிர்பார்த்தல்.

  • குடும்ப அங்கத்தவர்களின் தோற்றத்தினை விசாரித்தலும் ஒப்பிட்டு நோக்குதலும்.
    • உ+ம்:- நெட்டை, குட்டை, இளமை, முதுமை, எம்மில் யார் உயரம்?

  • வீடு பற்றிக் கதைத்தல்:-
    • எமது வீட்டினுடைய அமைப்பு, அறைகளின் எண்ணிக்கைகள், அதன் உபயோகம், அறைகளை யார் யார் உபயோகிக்கிறார்கள்.
      உ+ம்:- அப்பா எங்கே, குளியல் அறையில். இவ்வாறு குடும்ப அங்கத்தவர்கள், செல்லப்பிராணிகள் பற்றிக் கேட்டல்,

  • வீட்டுத் தோட்டம் பற்றிக் கதைத்தல், கேட்டல்.
    • உ+ம்:- மரம் செடி, கொடிகள் பற்றிக் கேட்டல், கீழே, மேலே, அருகில் என்ற சொற்கள் வைத்துக் கதைத்தல்.

  • வகுப்பறை பற்றிக் கதைத்தல் கேட்டல்.
    • உ+ம்:- வகுப்பில் உள்ள பொருட்கள், அதன் உபயோகம், பாடசாலையில் உள்ள பாடம், பிடித்த பிடிக்காத பாடங்கள் பற்றிக் கதைத்தல், ஏன் பிடிக்கவில்லை என்று கதைத்தல்.

  • கொண்டாட்டங்கள் பற்றிக் கதைத்தல்.
    • உ+ம்:- தீபாவளி, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு, கிறிஸ்மஸ், புதுவருடம், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டம் பற்றி அறிதல், கலந்து உரையாடுதல், கொண்டாட்டப் படங்களை காட்டி பேசுதல், கேள்விகள் கேட்டல்.
      நாடகம், பாடல்கள் நடனம் போன்றவற்றைச் செய்தல். அதன் மூலம் பிள்ளைகள் பேசும் ஆற்றல், நடிக்கும் ஆற்றல் போன்றவற்றை ஏற்படுத்துதல்.

Writing / எழுத்து

  • உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துகள் அறிதல்.
    • கைப்பொருட்கள், படங்ளை காட்டி எழுத்துக்களை அறிதல்.
      சில உயிர் எழுத்துக்களைத் தொடங்கும் சிறிய சொற்களைக் கூறி எழுதச் சொல்லுதல்.
      உ+ம்:- உயிர் எழுத்தில் தொடங்கும் இரண்டு எழுத்துச் சொற்களை எழுதுதல். அடி, இடு.
      மூன்று எழுத்து சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள் எழுதி உச்சரித்து சொல்ல, எழுதப் பழகுதல்.


Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 1
Past papers: Set 2


Resources

Recommended books