Curriculum

  • குற்றவியல்புகளை விபரித்தல்
    • உ+ம்:- வரிசைக் கிரமமான சம்பவங்கள் > களவு > கொலை > மற்றும் சமூக விரோதச் செயல்கள்
      1. என்ன சம்பவம் நடந்தது?
      2. எப்படி நடந்தது?
      3. காரணம் என்ன?
      4. யார் பொறுப்பு? இப்படியாக தேடுதல் செய்தல் > விளக்கங்களை எழுதுதல்.
      பொலிசாரின் விசாரனைகள். நீதியான தீர்ப்பு முறையாக விசாரித்தல்
      தேவையான தண்டனை இப்படியான குற்றங்கள் நம்மிடையே வரக்கூடாது என்பதை விளக்கி உறுதிப்படுத்துதல்.
      இலக்கணம்:- காலங்களைப் பற்றி உரையாடுதல். சிறைத் தண்டனை தீர்க்கப்பட்டது. எப்போது? ஏன்? எவ்வளவு காலம்? எவ்வாறான தண்டனை? கேட்டல், வாக்குமூலம், நேர்முக விளக்கம்.

  • பாடல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆக்கங்கள்
    • பாரதியார் பாடல், நீதிக்கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், நீதி வெண்பா, ஆத்திடி, கொன்றை வேந்தன், நாலடியார்
  • அரசியல்
    • என்ன நாட்டில் நடைபெறுகின்றது. இதனால் வரும் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரை எழுதுதல்.
      விஞ்ஞானம், சுற்றாடல், சமூக விளைவுகள். சமுதாய விளைவுகள்.
      சுகாதாரம், உடல் உறுதி இடத்திற்கு ஏற்ப உடை, உணவுப்பழக்க வழக்கம், சுத்தம், கழுவுதல், அளவு உணவு, சத்துள்ள உடல் நலம் பேணுவதற்கான உணவுகள் பற்றித் தெரிந்து விபரித்தல்.
      சினிமா (திரைப்படம்) பார்ப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்
      இணையத்தளத்தால் ஏற்படும் நன்மை தீமைகள்
      கைத் தொலைபேசியால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதுதல்.
      காலநிலை உடல் மனம் சூழல் வெப்பநிலை மழை குளிர் பருவகாலம் பற்றிக் கட்டுரை எழுதுதல் சிறுகதைகள் பாட்டுக்கள் நாடகங்கள் கவிதைகள் இவற்றைச் சுய முயற்சியால் எழுதுதல்.
      முக்கிய குறிப்பு:- திருக்குறள், ஆசார முறைகள், பாரதியார் பாடல், பாரதிதாசன் பாடல், நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் என்பவற்றில் இருந்து சில பகுதிகளை கற்பித்தல். பிள்ளைகளின் ஆர்வங்களைத் தூண்டுதல்.
  • எமது நாடு
    • புகழ் பெற்ற மனிதர்கள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட நாடுகள், மக்கள் வாழ்க்கை முறை.
      இந்தியா, ஐக்கிய இராட்சியம், இலங்கை.
      இலக்கணம்:- வினைஅடை, பெயர்அடை பற்றி அறிதல். நிறுத்தல் குறிகள் பற்றி அறிதல். கருத்தரங்கு உரைகள்,வழக்காடு மன்றம், இலக்கிய பேச்சு பற்றிய குறிப்புகள் அறிதல்.
      தேசிய நிகழ்வுகள், பல்வேறு நாடுகளின் சுதந்திர தினங்கள், பல்வேறு நாடுகளின் தேசிய அடையாளங்கள், மக்கள் ஆட்சி முறை, மன்னர் ஆட்சி முறை பற்றி அறிதல்,
      அண்டை நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துதல். வட்டாரம் மற்றும் அனைத்துலக நாடுகளின் அமைப்புகள் பற்றி அறிதல். உலக சுகாதார நிறுவனங்கள் பற்றி அறிதல். இயற்கை அதிசயங்கள் பற்றி அறிதல்.

  • இலக்கியமும் கலையும்
    • நடனம், நாடகம், கர்நாடக சங்கீதம், பண்ணிசை, வாத்தியங்கள், புராதன இதிகாச கதைகள், வரலாற்றுக் கதைகள், அறநெறிக் கதைகள்,பஞ்சதந்திரக்கதைகள் பற்றி அறிதலும் அவை பற்றிக் கட்டுரை எழுதலும்

  • விளையாட்டு
    • பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, சடுகுடு, சிலம்பாட்டம், ஆடு புலி ஆட்டம், கிளித்தட்டுப் பற்றி அறிதல்.

  • இலக்கணம் அறிதல்.
    • சொற் தொடர்களை பிரித்துப் பார்த்தல். வாக்கியப் பிழைகளை அடையாளம் காணுதல். மரபுத் தொடர்களைப் பற்றி அறிதல். பொருள்> இடம்> காலம்> சினை> குணம்> தொழில் பற்றி அறிதல்.
      தகவல் தொடர்புகளும், அதன் பயன்பாடும், கணனியின் பயன்பாடும், பல்வேறு விதமான நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கல்வி கற்றல். அசையும் படங்கள், புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களின் அமைவிடங்கள், காலநிலைகள், விடுமுறை, செல்லத்தகுந்த மாதங்கள் போன்றவற்றை இணையத்தளங்கள் மூலம் அறிதல். கணனி சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கான தமிழாக்கத்தை அறிதல்.

  • பன்னாட்டுத் தலைவர்கள்:- அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியத் தலைவர்கள்.
    விளையாட்டுக்கள்:- காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகள் பற்றி அறிதல்.
    பேச்சாற்றல், கவிதை, சிறுகதை, நாடகம் தயாரிக்கப் பழகுதல்.
    தினசரிக் குறிப்பு எழுதப் பழகுதல்.
    புராண இதிகாசக் கதைகள், செய்யுள், பாடல்கள் பற்றி அறிதல்.
    பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழிகளைப் பற்றி அறிதல்.
    சுய சிந்தனையினை வெளிப்படுத்துதல்.
    ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்.
    பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் அடைவதற்கு தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்தல். எழுதுதல்.
    பொருள், தொழில், நாடு ஆகியவற்றை ஊகித்துக் கூறுதல்.
    புதிர்களும், விடுகதைகளும்.
    சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைத்தல்.
    எதிர் காலம் பற்றிய கணிப்பீடுகள்.
    பிரச்சனைகளை இனங்காணல். அவற்றிற்கான தீர்வுகளை அறிதல்.
    பாடசாலை விதிகள், மற்றும் சமூக மன்ற விதிகள் பற்றி விவாதித்தல்.
    சமூக மாற்றங்களை உருவாக்குதலும் அவற்றைப் பாதுகாத்து நடாத்தலும் அதனால் சமூக நன்மைக்கு உழைத்தலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல்.
    தகவல்களைத் திரட்டுதல்.
    பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறை பற்றி அறிதல்.
    பண்பாடு, நாகரீகம் பேட்டி காணல்.


Assessment

All Examination Papers are in PDF format. To access these papers, it is required that a. PDF viewer is available on your device.

Past papers: Set 1
Past papers: Set 2


Resources

Recommended books